Kumar Nagarajan

Metroplex Tamil Sangam / Kumar Nagarajan

MTS 2023 Elections

For President

Kumar Nagarajan

தாய்மொழி தமிழால் ஒன்றிணைவோம் !!
தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்🙏, உங்கள் அன்பும், ஆதரவுடன் நான், முத்துக்குமார் என்கிற குமார் நாகராஜன் 2023 மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்க தேர்தலில் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடுகிறேன். எனக்கு வாக்களித்து தேர்வு செய்ய வேண்டுகிறேன். என்னை பற்றி சில வரிகளில்,* நான் 22 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருக்கிறேன். 18 ஆண்டுகளாக இங்கு டாலஸ்-போர்ட்ஒர்த் பெருநகரில் வசிக்கிறேன்.* கடந்த 4 ஆண்டுகளாக அவ்வை தமிழ் பள்ளி முதல்வராக பணியாற்றி கொண்டுள்ளேன். * சமூக நல ஆர்வலராக, தமிழ் ஆர்வலராக பல ஆண்டுகள் தமிழர் நலனை முன்னிறுத்தி காவிரி போராட்டம், ஜல்லிக்கட்டு, ஸ்டர்லைட் எதிர்ப்பு, சோழர் வரலாறு என பல நிகழ்வுகளை நடத்தியுள்ளேன்.* முள்ளிவாய்க்கால் தமிழீழ இனஅழிப்பை நினைவுபடுத்தும் விதமாக கடந்த 2019ல் பிரிஸ்கோ காமன்ஸ் பூங்காவில் ஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்து மரம் நடப்பட்டு, கல்வெட்டு வைக்கப்பட்ட இடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆண்டுதோறும் நடத்திக்கொண்டுள்ளோம். * டாலஸ்-போர்ட்ஒர்த் பெருநகரில் தமிழர்களுக்கான கோவில் இல்லாத காரணத்தால், பல ஆண்டுகளாக அதற்கான வேலைத்திட்டங்களை செய்து முருகன் கோவில் கட்டுவதற்கான இடத்தை நன்கொடையாக இதர வளர்ச்சி முதலீடுகள் மூலம் பெற்றுள்ளோம்.* பல்வேறு தன்னார்வல தொண்டு நிறுவனங்களில் தமிழ் நிகழ்ச்சிகள் நடத்த உதவிகள் செய்துள்ளேன். * பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு நிதியளிப்பும், நிதி திரட்டலும் செய்து எளிய தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்துள்ளேன் எதிர்கால திட்டங்களாக,* எங்கள் சேவை காலம் முடியும் முன்பு, தமிழ் சங்கம் நிரந்தர முகவரியுடன் நிகழ்ச்சிகள் நடத்த தமிழர் கூடல் என்கிற பெயரில் அரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்வோம்.* உறுப்பினர் பாகுபாடு இல்லாமல் அனைவரும் கலந்துகொள்ளும்படி, ஒருங்கிணைந்த மாபெரும் தமிழர்த்திருநாள் பொங்கல்விழாவை கொண்டாடுவோம், தமிழர் பாரம்பரிய உணவுகள் ஒன்றாக சமைப்போம், பகிர்ந்துண்ணுவோம், கொண்டாடுவோம்.* MTA பள்ளிமாணவர்களுக்கு உள்ளூர் ISDகளில் இரண்டாம்மொழிக்கான Credits பெற்றுத்தர முனைவோம்.* ஆண்டுதோறும் மே 18 அன்று தமிழீழ இனஅழிப்பு நினைவு நாள் நினைவேந்தல் நடைபெறும்.* ஆண்டுதோறும் சலுகைகள் கொண்ட தமிழ் சங்க உறுப்பினர்களுக்கு மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் திரையிடல்.* DFW வில் முதல் தமிழ் கோவிலாக டெண்டனில் அமையவிருக்கும் தமிழ் கடவுள் முருகன் கோவில் கட்டுமான நிதிதிரட்டுதலுக்கு உதவுவோம்.* MTA பள்ளி குடும்பங்கள் அனைவரும் சலுகைகள் கொண்ட தமிழ் சங்க உறுப்பினராக பதிவு செய்யப்படுவர்.* ஒருங்கிணைந்த தமிழ்ப்பள்ளிகள் மூலம் தமிழ் பேச்சு, தமிழ்த்திறன், தமிழ்த்தேனீ, தமிழிசை போட்டிகள் நடத்தி மாணவர் திறமைகளை வெளிகொண்டு வருவோம். * சலுகைகள் கொண்ட கட்டண உறுப்பினருடன், கட்டணம் இல்லாத உறுப்பினர் சேர்க்கையும்.* தமிழர்நலம் சார்ந்து பல்துறை (மருத்துவம், சட்டம், குடியேற்றம், வரி, …) வல்லுனர்களின் வழிகாட்டுதல்களை உறுப்பினர்கள் அறிந்துகொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்துவோம்.* தமிழர் வணிகங்களை ஊக்குவித்து, முதலீட்டு வாய்ப்புகளையும் உறுப்பினர்களுடன் பகிர்ந்து உதவுவோம்.* தொழில் முனைவோர் வழிகாட்டி குழு, வேலைவாய்ப்பு வழிகாட்டி இணையதளம் அமைத்து உறுப்பினர்களுக்கு உதவுவோம். * தொழில்முனைவோர் தங்களது வணிகங்களை காட்சிப்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்துவோம்.* தமிழ் விழுமியங்களை முன்னெடுத்து செல்கின்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை, கல்வி உதவித்தொகை கொடுப்பதற்கான வைப்பு நிதித் திட்டம் உருவாக்குதல்.* தனித்திறமை கொண்ட மாணவர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தி மேம்பாடு அடையச் செய்தல்.* ஆரோக்யமான வாழ்க்கை முறை ஊக்கப்படுத்த சித்த மருத்துவம் முகாம்கள் ஏற்பாடு செய்வோம். * மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்த பணம், நிதி தொடர்பான கல்வியை கற்றுத்தர ஏற்பாடு.* தமிழ்ச்சமூகம் சார்ந்த மருத்துவ, சூழியல் நிகழ்வுகளுக்கு உடனடி உதவிகள் செய்ய “அவசர உதவி வைப்புநிதி” திரட்டல்.* பல்வேறு துறைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்களை நடத்துதல்.* ஏழை, பாதிக்கப்பட்ட தாய்த்தமிழ் சொந்தங்களுக்கு மொய்விருந்து நிதிதிரட்டல் மூலம் உதவுவோம். * ஆண்டுதோறும் தமிழர்மரபு கலை இலக்கிய பண்பாட்டு விழாக்கள், கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்வோம். * அரசியல், விளையாட்டு, வழிபாடு, நகைச்சுவை, பெண்கள், மூத்தோர் குழுக்கள் அமைப்போம்.* வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி (Sports Day and Meet & Greet).* வெளிப்படையான நிர்வாகத்துடன், தொலைநோக்கு பார்வையோடு நமது தமிழ்ச்சங்கத்தை கட்டமைப்போம். வாழ்க தமிழ் மொழி! வளர்க தமிழர் ஒற்றுமை! தமிழ்மொழி சிறக்க, தமிழர்நலம் செழிக்க வாக்களியுங்கள்🙏. நன்றி 🙏 ——————————— Lets be united in the name of our mother-tongue Tamil! Greetings to all Tamilians🙏, About Me:* I’m Kumar (Muthukumar) Nagarajan. I’m contesting in MTS 2023 election to serve as President.* Living in USA since 2000 and living in DFW since 2006. * Volunteering in Avvai Tamil School as Principal for last 4 years.* As a Social Activist and Tamil Enthusiast conducted many events (Jallikattu, Kaveri Protest, Sterlite Opposition, Cholas History) with Tamils benefit in mind.* Planted a tree and metal engraving in Frisco Commons Park to remember the Mullivaikkal Genocide of Tamil Eelam and organized remembrance day event every year since 2019.* Worked many years to organize a project to build the first Tamil Temple (Denton Murugan Temple) in DFW area and received the land as donation through a Real Estate Investment and Development opportunity.* Helped organize Tamil events and serve people through various non-profit organizations. * Donated and helped raise money for various non-governmental organizations for Tamil cause.  Future Vision:* Before our service period ends, acquire the land to build an auditorium in the name of “ThamilarKoodal” that would give a static address to MTS and begin actual construction.* Organize a free open public event celebrating Tamil Pongal Day with traditional food. Lets cook together, eat, play and enjoy. Have a fun day.* Help MTA School Students get second language credits in local ISDs.* Organize Tamil Eelam Genocide Remembrance on May 18 every year. * Screen three or four Tamil Movies every year for the paid members. * Help raise fund for the construction of upcoming first Tamil Temple in DFW (Tamil Kadavul Murugan Kovil in Denton).* Provide free MTS paid membership to all MTA school families.* Organize Tamil Schools in DFW area to perform and bring out skills of youths in Tamil Speech, Tamil Bee, Tamil Music, Thirukural and recognize teachers and talents.* Register all paid members (vote, other benefits, discounts) along with non-paying members.* Lets members avail Expert’s, Scholar’s advice, council and guidance on various aspects of life (Physical Health and Mental Strength, Wealth and Money, Spiritual Wellness, Family and Relationship).* Help and encourage entrepreneurship and technical skills development. Build a portal to finding jobs for the members.* Promote and showcase Tamil small businesses and share Investment Opportunities with members.* Provide “Education Scholarship” to students who promote and advances Tamil’s value. * Find and encourage students with distinctive skills and help them to develop it further. * Organize Siddha programs to enable healthy lifestyles. * Provide financial education to young kids to strengthen their future.* Setup “Emergency Funding” by raising money for medical and environmental emergencies.* Setup Kids Summer Camp to develop various skills. * Help recover affected Tamil people through “MoiVirunthu” funding.* Organize Tamil Traditional Art Literary Cultural Festivals every year.* Setup groups for Politics, Sports, Spiritual, Ladies, Seniors and Comic Humor Clubs.* Sports Day and Meet & Greet (வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி).* Construct Tamil Sangam with Open, Transparent Management and Futuristic Vision. Long Live Tamil Language!Long Live Tamils Togetherness! Vote for us to keep Tamil special and to lead Tamils growth.


Youtube