தாய்மொழி தமிழால் ஒன்றிணைவோம் !!
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்
என்னை பற்றி:
* என் பெயர் இளங்கோ சுந்தரராஜன்.
* நான் 18 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருக்கிறேன்.
* கடந்த 12 ஆண்டுகளாக டாலஸ் போர்ட்ஒர்த் மாநகரில் வசிக்கிறேன்.
* தகவல் தொழில்நுட்ப துறையில் பல்வேறு பொறுப்பில் பணியாற்றி வந்துள்ளேன்.
* பிளானோ தமிழ் பள்ளி தன்னார்வலராக பல உதவிகள் புரிந்துள்ளேன்.
* தமிழ் ஆர்வலராக பல்வேறு தமிழர் நலனை முன்னிறுத்தும் நிகழ்வுகளுக்கு ஆதரவும், உதவியும்
செய்துள்ளேன்.
* தனிப்பட்ட நிதி ஆலோசகராக பலதரப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளேன்.
* பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு நிதி திரட்டல் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள்
செய்துள்ளேன்.
* பல்சுவை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக முன்னின்று நடத்திய அனுபவம் உள்ளது.
எதிர்கால பார்வை:
* தமிழ் இளையோரிடம் பேச்சு தமிழை வளர்க்க பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்துவோம்.
* தமிழ் மாணவ செல்வங்கள் படிப்பிலும் மட்டும் ஓங்கி ஒலிக்காமல் நிதி கல்வியறிவு செழிக்க பயிற்சிகள்
வழங்குவோம்.
* உடல் நலம் பேண மாதந்தோறும் சித்த வைத்தியம் கருத்தரங்கு ஏற்பாடு செய்வோம்.
* சிறு தொழில் முனைவோருக்கு ஒரு நடைமேடை ஏற்படுத்தி கொடுப்போம்.
* தமிழ் சொந்தங்கள் மூலம் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு தேட ஒரு பாதையை அமைக்கவேண்டும்.
* வரவிற்கும் டெண்டன் முருகன் கோவில் அருகில் ஒரு தமிழ் சமூக மையம் அமைப்போம்.
* தமிழர் பாரம்பரிய உணவுகள் கூடி சமைத்து உண்போம்.
வாழ்க தமிழ் மொழி
வளர்க தமிழர் ஒற்றுமை
தமிழ்மொழி சிறக்க, தமிழர்நலம் செழிக்க வாக்களியுங்கள்
https://www.youtube.com