விதிகளும் முறைகளும்
பேச்சுப் போட்டி விதிகள் & முறைகள்
- கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்தல் அவசியம்
- நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
- போட்டியாளரின் வயது 1/31/2023-ஐக் கொண்டு, முடிந்த வயது கணக்கில் கொள்ளப்படவேண்டும்
- போட்டியாளர் தம் வயதிற்குத் தகுதியான நிலைக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பில் ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பேசவேண்டும்
- முடிந்தவரை தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்தவேண்டும்
- தவிர்க்க முடியாத இடங்களில் அல்லது மேற்கோள் காட்டுதலில் ஆங்கிலம் பயன்படுத்தலாம்
- 3 முதல் 5 நிமிடங்கள் வரை பேசலாம்
- மெய்நிகர் வழியில் போட்டிகள் நடத்தப்படும்
- போட்டிகள் பிப்ரவரி 10-நஆம் தேதிக்கு மேல் 17-ஆம் தேதிக்குள் வார நாட்களின் மாலையிலோ, வார இறுதி நாட்களிலோ நடத்தப்படும்
- போட்டி நேரத்தில் கலந்துகொள்ள முடியாத போட்டியளர்களுக்கு மறுவாய்ப்பு வேறொரு நாளில் வழங்கப்படமாட்டாது
- கொடுக்கப்பட்ட உரலியில்(URL) போட்டியாளரின் பெயரில் இணைந்து, அமர்ந்தோ, நின்றுகொண்டோ பேசலாம்
- தமது வாய்ப்பு வரும்வரை ஒலிவாங்கியை(Mute Mic) அணைத்து வைத்திருக்கவேண்டும்
- பேசுபவர் தவிர பிற ஒலிகளைத் (Background Noise) தவிர்க்கவேண்டும்
- தங்குதடையின்றி தமிழில் பேச வைப்பதுதான் இப்போட்டியின் நோக்கம்
- போட்டிகளில் பங்கேற்றல் வெற்றிபெறுவதற்கு மட்டுமன்று. தோல்வி பழக்குதலுக்குமானது
- முதல் இரண்டு இடங்களில் வெற்றிபெறுபவர்கள் விழா நாளன்று மேடையில் பேச வாய்ப்பு வழங்கப்படும்
தீந்தமிழ் பேசுக விதிகள் & முறைகள்
- கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்தல் அவசியம்
- நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
- தலைப்புகள் தினசரி வாழ்க்கையில் பெரும்பாலும் பயன்படுத்தும் பொருட்கள் குறித்தோ, வழக்கங்கள் குறித்தோ, வாழ்க்கை முறை குறித்தோ, தமிழ்/தமிழர்கள் குறித்தோ சிறுசிறு தாளில் எழுதப்பட்டு மடித்து ஒரு குடுவையில் போடப்பட்டிருக்குகும்
- விழா நாளன்று மேடையில் போட்டியாளருக்கான வாய்ப்பு வரும்போது, குடுவையில் இருந்து ஒரு தலைப்பிட்ட தாளை எடுத்து 2 நிமிடங்கள் தமிழில் பேசவேண்டும்
- இப்பேச்சு பிறமொழிக் கலப்பின்றி இருக்கவேண்டும்
- தங்கிலிஷ் மற்றும் ஆங்கில வார்த்தைகள் கலக்கக்கூடாது
- தமிழில் சில சமஸ்கிருத வார்த்தைகள் கலந்திருப்பதை உணருதல் அறிது. யாரேனும் அறியாமல் பயன்படுத்துவது தெரியவந்தால், போட்டியாளரின் வாய்ப்பு முடிந்தபிறகு சரியான தமிழ் வார்த்தையை அறிந்தவர்கள் பகிரலாம். இது எதிர்காலத்தில் திருத்திக்கொள்ள உதவும். இத்தவறு போட்டியாளரின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்காது
- பேசுபவர் தவிர பிற போட்டியாளர்கள் அமைதி காக்கவேண்டும்
- தங்குதடையின்றி கலப்பற்ற தமிழில் பேச வைப்பதுதான் இப்போட்டியின் நோக்கம்
- போட்டிகளில் பங்கேற்றல் வெற்றிபெறுவதற்கு மட்டுமன்று. தோல்வி பழக்குதலுக்குமானது
சுவரொட்டி(Poster) போட்டி விதிகள் & முறைகள்
- கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்தல் அவசியம்
- நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
- சுவரொட்டிகள் ‘தமிழ்நாடும் வரலாறும்’ எனும் தலைப்பையொட்டி தயார் செய்யப்படவேண்டும்
- போட்டியாளர் தாமாக வரைந்தோ, வண்ணம் தீட்டியோ சுவரொட்டிகளை உருவாக்கலாம்
- சுவரொட்டி அல்லாமல் மூன்று கோணம் (3D) கொண்ட உருவங்களாகவும் செய்துவரலாம்
- இவையனைத்தும் பார்வைக்கு வைக்க இடம் ஒதுக்கப்புடும்
- சுவரொட்டிகளைத் தயார் செய்வது மட்டுமல்லாமல் அது குறித்து சில நிமிடங்கள் பார்வையாளர்களுக்கும், நடுவர்களுக்கும் முடிந்தவரை தமிழில் விளக்கவேண்டும்
- போட்டிகளில் பங்கேற்றல் வெற்றிபெறுவதற்கு மட்டுமன்று. தோல்வி பழக்குதலுக்குமானது
- வெற்றி பெற்றவர்கள் மேடையில் கொடுக்கப்படும் நேரத்தில் காட்சிப்படுத்தி விளக்கவேண்டும்
புதுமுக நட்பு கூ(ட்)டல்
- மெட்ரோப்ளெக்ஸ் சங்கத்தில் புதிதாக உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கானது இந்த வாய்ப்பு
- கொடுக்கப்படும் நேரத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் மேடையேறி தங்களைப் பற்றிய சிறு அறிமுகம் செய்யவேண்டும்
- இவ்வாய்பு பிற உறுப்பினர்களுடன் இயல்பாக இணைவதற்கும், நட்பு வட்டங்களைப் பெரிதாக்குவதற்கும், சூழலை கலகலப்பாக்குவதற்குமானது
விதைகள் வழங்கல்
- கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் பதிவு செய்தல் அவசியம்
- அதிகபட்சமாக 300 பேருக்கு மட்டுமே விதைகள் கைவசம் உள்ளது
- விழா நாளன்று பதிவு செய்தலில் முன்வருவோருக்கே முன்னுரிமை (First Come First Serve)
- விதைகள் வழங்கல் கைவசம் உள்ளவரை மட்டுமே
ஆடல் பாடல்
- விழா நேரம் குறைவாக இருப்பதால், டாலஸ் நகரைச்சுற்றி நடத்தப்படும் பதிவு செய்யப்பட்ட பள்ளிகளுக்கான வாய்ப்பு இது
- பள்ளி முதல்வர்கள் மூலம் மட்டுமே பங்குபெறும் குழு விபரங்கள் சேகரிக்கப்படும்
- கொடுக்கப்பட்ட நேரம் ஒட்டுமொத்த பள்ளி கிளைகளுக்குமானது (Irrespective of branches & sessions)
உள்ளூர் வாழ் தமிழ் எழுத்தாளர்கள் அங்கீகாரம்
- தமது பெயரிலோ, புனைப் பெயரிலோ தமிழில் புத்தகம் தனி எழுத்தாளரக அச்சு வடிவில் 2022 அல்லது அதற்கு முன்பு வெளியிட்டிருக்கவேண்டும்
- பெரும்பாலான எழுத்தாளர்களின் பட்டியல் நிர்வாகக் குழுவிடம் உள்ளது
- நிர்வாகக் குழு அல்லது நியமிக்கப்பட்ட தன்னார்வலர் மூலமாக எழுத்தாளர்களின் மேலதிக தகவல் சேகரிக்கப்படும்
பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களை, சங்கம் தொடர்புகொள்ளத் தவறினால், விடுபட்ட எழுத்தாளர்கள் info@dfwmts.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்